இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின்; தொலைத் தொடர்பு அதிர்வெண்கள் பதியப்பட்ட முக்கிய நிலைய ஆவணம் ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஏற்கனவே சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெற்றுள்ள நிலையில் அந்த இடத்தில் குறித்த நிலையக்குறியீட்டு ஆவணம் இன்று கானப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிலையக்குறியீட்டு ஆவணத்தில் தலைமைச் செயலகம், கட்டளைத்தளபதி ரமேஸ், லெப்ரினன் கேணல் இம்ராண்பாண்டியன், வவுனியா கட்டளைப்பணியகம், ராதா வான்காப்பு படையணி, அரும்பு, சால்ஸ்அன்ரனி சிறப்பு படையணி, லெப்ரினன்கேணல் குட்டிசிறி மோட்டர் படையணி, வன்னிமாவட்ட பணியகம், கிட்டுபிராங்கிப்படையணி, மாலதி படையணி, சோதியபாடையணி, மில்லர் பணிமனை, புலனாய்வ்வுத்துறை, நிதித்துறை, காவல்துறை, உள்ளிட்ட முக்கிய பணியகங்களின் தொலைத் தொடர்பு அதிர்வெண்கள் பதியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.