காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தைச் செயற்படுத்துவதற்காக உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கையில் அரசமைப்புப் பேரவை தீவிரமாக இறங்கியுள்ளது.
தலைவர், செயலர் உட்பட பதவிநிலை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்காக சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசமைப்புப் பேரவை நாடாளுமன்றத்தில் கூடியது.
பணியகத்துக்கான உறுப்பினர்களை முறையான தெரிவின் பிரகாரம் உரிய தரநிர்ணயங்களின் அடிப்படையில் தெரிவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக்கோரும் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.
வழமையாக பதவி நிலைக்குச் சில உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படும். தகுதியான ஒருவரையே அரசமைப்புப் பேரவை நியமிக்கும்.
ஆனால், காணாமல்போனோர் பணியக விடயத்தில் மாறுபட்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவது முக்கியத்துவமிக்கதாகக் கருதப்படுகின்றது.