கன்னடத்தில் வெளியான யு டர்ன் படத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பிறகு மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் தமிழுக்கு வந்த ஸ்ரத்தா ஸ்ரீநாத், பின்னர் விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார்.
இப்போது நிவின்பாலி நடித்து வரும் ரிச்சி படத்திலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில், முதன்முறையாக அவர் பாகுபலி வில்லன், ராணா தயாரிக்கும் ஒரு தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். மேலும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்தவராக இருந்தபோதும் நன்றாக தெலுங்கு பேசுவாராம்.
இதுபற்றி அவர் கூறுகையில், எனது தந்தை ஒரு ராணுவ அதிகாரி. அதன்காரணமாக எங்கள் குடும்பம் பல ஊர்களுக்கு மாறிக்கொண்டேயிருப்போம். அந்த வகையில், ஐதராபாத்திலுள்ள திருமல்ஹரியில் 6 ஆண்டுகள் இருந்திருக்கிறோம். அதனால் எனக்கு நன்றாக தெலுங்கு பேசத் தெரியும் என்று கூறியுள்ள ஸ்ரத்தா ஸ்ரீநாத், முதல் தெலுங்கு படத்திலேயே தனக்குத்தானே டப்பிங் பேசப் போகிறாராம்.