கொழும்பு பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக அப்பல்கலைக்கழக கலைப்பீட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் நடைபெற மாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.