சீனாவின் தியாங்காங் என்ற விண்வெளி ஆய்வுக்கூடம் தரைக்கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்ததால் அது பூமியின் மீது விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு தியாங்காங் என்ற விண்வெளி ஆய்வு கூடத்தை நிறுவியது சீனா. இந்த ஆய்வுக்கூடத்தை சீனா விண்வெளி சாதனையில் மிகப்பெரிய சக்தியாக கருதியது.
இது 8. 5 டன் எடை கொண்டது.
இந்த ஆய்வகம் தரைகட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்ப்பை இழந்ததால் இது செயல் இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்வெளி நிலையம் பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது.
இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இது பூமியில் விழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1991 ஆம் ஆண்டு சோவியத் யூனியனின் 20 டன் எடையுள்ள சல்யூட்-7 என்ற விண்வெளி நிலையம் பூமியில் விழுந்தது.
அதேபோல், 1979 ஆம் ஆண்டு நாசாவின் 77 டன் எடையுள்ள ஸ்கலேப் என்ற விண்வெளி ஆய்வுக்கூடம் பூமியில் விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த சீன விண்வெளியால் எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.