நடிகை ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு அந்த பிக் பாஸ் வீட்டிற்கு சென்றவர் சுஜா வருணி. கமல் ஹாஸனிடம் நல்ல பெயர் வாங்கினார். ஆனால் மக்கள் மத்தியில் சுஜாவிற்கு பெரிதாக நல்ல பெயர் இல்லை.
இந்நிலையில் சுஜா ஓவியா தனக்கு அளித்த பிறந்தநாள் பரிசு குறித்து ட்வீட் செய்துள்ளார்.
முத்தம் பிக் பாஸுக்கு முன்பே நீ என் தோழி, நீ வித்தியாசமானவள், உன்னுடைய முத்தம் தான் என் பிறந்தநாள் பரிசு என்று கூறியதற்கு நன்றி என ஓவியா பற்றி ட்வீட்டியுள்ளார் சுஜா வருணி.
ஓவியா பிக் பாஸ் வீட்டில் சுஜா வருணி ஓவியா போன்று நடக்க முயற்சிப்பதாக நெட்டிசன்கள் முன்பு தெரிவித்தனர். தைரியமான பொண்ணு என்று பார்வையாளர்களிடம் பெயர் எடுத்தார் சுஜா.
சுஜா வருணியும், ஓவியாவும் மாறி மாறி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
ஓவியாவை வைத்து படம் எடுக்க பல இயக்குனர்கள் விரும்பினாலும் தன்னை தேடி வரும் அனைத்து வாய்ப்புகளையும் அவர் ஏற்றுக் கொள்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.