வடக்கில் ஓர் சட்டமும் தெற்கில் மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடக்கில் தற்போது தனியான சட்டமே அமுல்படுத்தப்பட்டு வருகின்றது எனவும், வடக்கின் சட்டம் வடக்கிற்கு தேவையான வகையில் அமுல்படுத்தப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தேவைகளை கருத்திற் கொண்டு, வடக்கில் எதனைச் செய்தாலும் அதனை அரசாங்கம் வேடிக்கை பார்த்து வருகின்றதாகவும் அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் சிறுவர்கள், தாய்மார் இன்று சிறையில் வாடுகின்றனர் எனவும் இவை பாரிய பாவச் செயலாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.