ராகம மற்றும் ஹொரப்பே ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டதாக கூறப்படும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்கா.ங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கி சென்ற ரயிலில் பயணித்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணம் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பலியானவர் யார் என, இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும்
சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.