06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் காமினி ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்..
இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட மற்றும் காலி மாவட்டத்தில் நெலுவ ஆகிய பகுதிகளில் இரண்டாம் நிலைக்குரிய மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நுவரெலியா, இரத்தினப்புரி, களுத்துறை, கேகாலை, மாத்தளை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் முதலாம் நிலைக்குரிய மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.