உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் தாம் கேரியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
கலப்பு தேர்தல் முறைமை ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் தொடர்பில் எதிர்வரும் மாதங்களில் நாடாளுமன்றில் விவாதிக்கப்படவுள்ளது.
அந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்ததன் பின்னர் தேர்தலை நடத்துமாறு தேர்தல்ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனவரி 6ஆம், 20ஆம்மற்றும் 27ஆம் திகதிகளில் சடத்த முடியும் என தேர்தல் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.