வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அனுகூலங்கள் சீராக பகிரப்படவேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் நேற்று (வெள்ளிக்கிழமை) செனட்டில் உரையாற்றும்போதே மேற்படி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெறுகின்ற வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் கடுமையான கோரிக்கைகளால் சோர்விழந்துள்ள போதிலும் மீள்பேச்சுவார்த்தைக்கு இணைந்து பணியாற்றுவதற்கு மெக்சிகோ மற்றும் கனேடிய தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.