ரொறன்ரோ விலங்குக் காட்சிச் சாலையில் இருந்த இரட்டை பன்டா குட்டிகள் வெள்ளிக்கிழமை தமது இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் குறித்த இரண்டு பன்டா குட்டிகளும் கல்கரி விலங்குக் காட்சிச் சாலைக்கு அனுப்பப்படவுள்ள நிலையில் மிகச் சிறப்பாக இந்த பிறந்தநாள் கொண்டாடப்பட்டது
மூங்கில் கேக் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று எழுதப்பட்ட பதாதை என விலங்குக் காட்சிச்சாலையின் ஊழியர்களால் பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஜியா பன்பன் மற்றும் ஜியா Yueyue என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த இரு பன்டா குட்டிகளும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி ரொறன்ரோவில் பிறந்தன.