கப்பம் பெற முயற்சித்த ஒருவர் கொட்டாவை, பன்னிப்பிட்டிய மாக்கும்புர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தி கப்பம் பெற முயற்சித்துள்ளதாக பொலிஸார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பன்னிப்பிட்டிய, பொரள்ளை வீதியை சேர்ந்த 40 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை குருணாகல் நகரில் ஒருவரை கடத்திச் சென்று மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரூபாவை கப்பமாக பெற முயற்சித்த இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொல்பித்திகம பிரதேசத்தை சேர்ந்த 27 மற்றும் 28 வயதான நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.