காற்றில் பரவும் கார்பன்டை ஆக்சைடு அளவின் அதிகரிப்பு காரணமாக பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே காற்றில் கார்பன்டை ஆக்சைடு கலப்பதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் முதற்கட்டமாக கரும்புகையை வெளியிடும் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் பயன்படுத்தும் கார்களை தடை செய்ய சர்வதேச நாடுகள் திட்டமிட்டுள்ளன.
இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் வருகிற 2020-ம் ஆண்டில் இருந்து பெட்ரோல், மற்றும் டீசல் கார்கள் தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை அந்த நாடுகள் தற்போது மேற்கொண்டு வருகின்றன. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வருகிற 2020-ம் ஆண்டில் இருந்து கியாஸ் மூலம் இயங்கும் கார்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வருகிற 2020-ம் ஆண்டு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது.