ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் எதேச்சதிகார போக்கில் நீக்கப்படுகின்றனர். கட்சியை மலினப்படுத்தும் முயற்சியாகவே இதனை கருத வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியை வலுவான கட்சியாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த நான் நடவடிக்கை எடுத்திருந்தேன். எனினும் தற்பொழுது அதன் மறுபக்கமே நடைபெறுகின்றது.
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பெரும் அதிருப்தியில் இருக்கின்றார்கள். இவ்வாறு சுதந்திரக் கட்சியை மலினப்படுத்துவதனால் அதன் நலன்கள் ஐக்கிய தேசியக் கட்சியையே சென்றடையும்.
தற்போது இடம்பெறும் இந்த பிரச்சினைகளை பார்க்கும் போது எனக்கு தனிப்பட்ட ரீதியில் பெரும் கவலை வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.