பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான தி வைன்ஸ்டீன் கம்பெனியின் தலைவர் ஹார்வீ வைன்ஸ்டீன் மீது பாலியில் புகார் அளித்த நடிகை ரோஸ் மெக்கோவனின் ட்விட்டர் பக்கத்துக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டத்தையடுத்து #WomenBoycottTwitter என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
முதலில் ரோஸ் மெக்கோவனுக்கு ஆதரவாக ட்விட்டரில் பெண்கள் #WomenBoycottTwitter என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்த நிலையில் தற்போது ஆண்கள் பலரும் இதில் இணைந்துள்னனர்.
‘தி ஆர்டிஸ்ட்’, ‘தி இமிடேஷன் கேம்’, ‘ஜாங்கோ அன்செயிண்ட்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த வைன்ஸ்டீன் கம்பெனியின் துணை நிறுவனர் ஹார்வீ வைன்ஸ்டீன் நடிகைகளுக்கு பல வருடங்களாக பாலியல் துன்புறுத்தல் தந்து வந்ததாக வெளியான செய்தி தற்போது ஹாலிவுட்டில் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, ரோஸ் மெக்கவுன், க்வெனித் பேல்ட்ரோ உள்ளிட்ட நடிகைகள் ஹார்வீயால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தற்போது வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.
நடிகை ரோஸ் மெக்கவுன் தான் ஹார்வீ வைன்ஸ்டீன்னால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை தனது ட்விட்டர் பகக்த்தில் பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில் ரோஸ் மெக்கவுன் வியாழக்கிழமை தனது இன்ஸ்டர்கிராம் பக்கத்தில் எனது ட்விட்டர் அக்கவுண்ட்டை உபயோகப்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றையிட்டுருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரோஸ் மெக்கவுன்னுக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டர் வாசிகள் பலரும் அடுத்த 24 மணி நேரத்துக்கு ட்விட்டரை புறக்கணிக்கப் போவதாக பதிவையிட்டு #WomenBoycottTwitter என்ற ஹாஷ்டேக்கை ட்ரெண்டாகி வருகிறார்கள்.