பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன், ஊழலுக்கு எதிரான அமைப்பினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவர் லண்டனிலிருந்து பாகிஸ்தானுக்கு திரும்பியபோதே, இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பில், சிறப்புக் கூட்டு புலனாய்வுக்குழுவை அமைத்து விசாரணை நடத்துவதற்கு கடந்த மே மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.