லண்டனில் உள்ள தேம்ஸ நதியின் மீது சாகசத்தில் ஈடுபட்ட பைக்ரேஸ் வீரர் ஒருவர், மோட்டார் சைக்கிளுடன் ஒரு புறத்திலிருந்து இன்னொரு புறத்திற்கு பாய்ந்து சாதனை படைத்தார்.
அமெரிக்க ஸ்டன்ட் வீரர் டிராவிஸ் பாஸ்ட்ரானா, லண்டன் தேம்ஸ் நதியின் இரண்டு தெப்பங்களுக்கு இடையே சுமார் 75 இடைவெளியில் பைக்குடன் பாய்ந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
அந்தரத்தில் மோட்டார் சைக்கிளுடன் அவர் பாய்ந்த காட்சி பார்வையாளர்களை வியப்படைய செய்தது. இந்த ஆபத்தான் ஸ்டன்ட் காட்சியை பலர் தங்களது கேமராக்களில் படம்பிடித்துக்கொண்டனர்.
அவை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உலக சாதனை படைத்துள்ள ஸட்ன்ட் வீரருக்கு பலர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.