‘மெர்சல்’ படத்தலைப்பு தலைப்பு சர்ச்சை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
‘மெர்சல்’ படத்தலைப்பை உபயோகிக்க தடை விதிக்கக் கோரி ராஜேந்திரன் என்ற தயாரிப்பாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு குறித்து பதிலளிக்குமாறும், அது வரை ‘மெர்சல்’ தலைப்பை உபயோகிக்க தடை விதித்தது உயர் நீதிமன்றம்.
இவ்வழக்கு இன்று (செப்டம்பர் 6) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை தள்ளுப்படி செய்து உத்தரவிட்டது சென்னை உயர் திமன்றம். இதனால் ‘மெர்சல்’ படக்குழு மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளது. மேலும், ‘மெர்சல்’ படத்தின் இறுதிகட்டப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது. தீபாவளி வெளியீடு உறுதி என்று தயாரிப்பாளர் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.