5 நாட்களுக்கு பூமியில் இருள் சூழும் என வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
15 நாட்களுக்கு பூமியில் இருள் சூழும் !!!!
எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை புவியில் இருள் சூழவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன.
நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அதிகாலை 3 மணி முதல் இருள் சூழவுள்ளதாக நாசா அறிவித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின்றன.
இந்நிலையில், இவ்வாறான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பேராசிரியர் சந்தன ஜயரத்ன ஊடகங்களிற்குத் தெரிவித்தார்.
இவ்வாறான தகவல்கள் இதற்கு முன்னரும் வௌியாகியதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.