இந்தியாவின் நாமக்கல் மாவட்டம் அருகிலுள்ள பேளுக்குறியிச்சியில் தாய் ஒருவர் அவரது 7 மாத குழந்தையுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 3 தினங்களாக சுகயீனமுற்றிருந்த தாய் மற்றும் அவரது 7 மாத ஆண் குழந்த சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுள்ளனர். இதன்போது வைத்தியர் குறித்த இருவருக்கும் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வீடு திரும்பிய தாய் மற்றும் சேய் ஆகிய இருவரும் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
பேளுக்குறிச்சியில் இறந்து போன அந்தத் தாயின் கணவர், நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சையைச் சேர்ந்த பெரியசாமி எனும் சலவைத் தொழிலாளி. இவரது மனைவி பெயர் பூங்கொடி. இவர்களுக்கு 8 வயதில் சர்மிளா என்ற பெண் குழந்தை இருக்கிறது.
சர்மிளா பிறந்து 7 ஆண்டுகள் கழித்து சர்வின் என்ற மகன் பிறந்தார். சர்வினுக்குத் தற்போது 7 மாதம் ஆகிறது. தற்பொழுது 8 வயதுடைய மகள் அம்மாவின்றி தவிப்பதோடு குழந்தையையும் மனைவியையும் இழந்த சோகத்தில் இறந்த தாயின் கணவர் காணப்படுகின்றார்.