கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் ஆசியாவின் மிக உயரமான கட்டடம் என்று கூறப்படும் தாமரைக் கோபுரம் அடுத்த வருடம் மார்ச் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கான திட்டப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், உட்புற மற்றும் வெளிப்புற பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாவும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
சீனாவின் எக்ஸிம் வங்கியின் 104.3 மில்லியன் ரூபா நிதியில் இந்தத் திட்டம் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கோபுரத்தில் 50 தொலைக்காட்சி மற்றும் 35 வானொலி சேவைகளுக்கு இணைப்புக்களை வழங்கவுள்ளது. அத்துடன், மாபெரும் விற்பனை கூடங்கள், உணவகங்கள், காட்சியறைகள் உள்ளிட்ட மேலும் பல வசதிகளும் இந்த தாமரை கோபுரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.