லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் வடக்கு முனையில் உள்ள பிக் பென் மணிக்கூடு எதிர்வரும் 2021ஆம் ஆண்டுவரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மணிக்கூட்டில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், திருத்த பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் நேற்று இறுதியாக ஒலிக்கப்பட்டுள்ளது.
இதனை காண்பதற்கென நூற்றுக் கணக்கான சுற்றுலா பயணிகளும் பார்வையாளர்களும் கூடியிருந்தனர்.
நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் இந்த பிக் பென் மணிக்கூடே உலகின் மிகப் பெரியதாகும். அத்துடன், உலகின் மூன்றாவது மிகப்பெரிய மணிக்கூண்டுக் கோபுரம் இதுவாகும். இம்மணிக்கூடு 1858ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.