பூபதி பாண்டியன் விமலை வைத்து இயக்கும் மன்னர் வகையறா படத்தில் நடிக்க பிந்து மாதவியை ஒப்பந்தம் செய்தனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட அண்மையில் வெளியானது. ஷூட்டிங் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.
ஒரேயொரு பாடலை மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருப்பதால் இந்த படத்தில் இருந்து பிந்து மாதவி நீக்கப்பட்டுள்ளார்.
பிந்து திடீர் என்று பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டதால் நாங்கள் வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்துவிட்டோம். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்ததால் விஜய் சேதுபதியின் சீதக்காதி பட வாய்ப்பை இழந்தார் ஓவியா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓவியாவுக்கு கோலிவுட்டில் ஏக மவுசு.