சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் படம் சங்கமித்ரா. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ஆச்சரயப்படுத்தியது.
இதில் ஸ்ருதிஹாசன், ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் கமிட்டாகி இருந்தனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் படத்திலிருந்து விலக்கப்பட்டதாக தகவல்கள் வந்தது.
தற்போது இதற்கான காரணம் என்ன என்பது வெளியாகியுள்ளது. இதில் இரண்டு வருடங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்ட இப்படத்தின் முக்கியத்துவம் குறித்து அறிந்த ஸ்ருதி கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே இதற்கான பயிற்சிகளும் எடுத்து வந்தார்.
விரைவில் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படவுள்ள நேரத்தில் இன்னும் அவருக்கு முறையான ஸ்க்ரிப்ட்டும், சரியான தேதிகளும் கொடுக்கப்படாததால் தொடர்ந்து பணியாற்ற ஆர்வம் காட்டவில்லை என ஸ்ருதி தரப்பு சொல்லியிருக்கிறது.
தற்போது ஸ்ருதி behan hogi theri, prep, sabash naidu ஆகிய படங்களின் பிரமோஷனில் பிசியாக இருக்கிறார்.