வட கொரியாவுக்கு பதிலடி தரும் வகையில் அந்நாட்டின் மீது தென் கொரியா இராணுவத்தினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தென் கொரியா தலைமை அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் கொரியா வான்பரப்பில் அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று பறந்தது.
இதனையடுத்து, தென் கொரிய இராணுவம் விமான கண்காணிப்பை அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடி தரும் வகையில் வட கொரியாவிற்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
எனினும், தாக்குதல் குறித்து தென் கொரியா மேலதிக தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் தென் கொரிய செய்தி நிறுவனம் ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தியில், வட கொரியாவை நோக்கி தென் கொரியா 90 இயந்திர துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
அதேசமயம், வட கொரியாவின் டிரோன் எல்லை கடந்து விட்டதா என்பதை தென் கொரியா ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது.