அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாதசாரிகள் மீது கார் வேகமாக மோதிய விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
அமெரிக்காவின் வணிக தலைநகரமான நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் நவ் சதுக்கத்தில் இன்று பாதசாரிகள் சாலையை கடக்கும் போது கார் ஒன்று வேகமாக அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும், 12 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த நியூயார்க் நகர பொலிசார் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த விபத்து தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், இது ஒரு எதிர்பாராமல் நடந்த விபத்து தான் என நகர பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
இருப்பினும் கைது செய்யப்பட்ட நபரின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து பொலிசாரின் விளக்கங்களை ஏற்றுள்ளதாகவும், நகரின் அனைத்து பகுதிகளும் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரித்துள்ளதாகவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் தெரிவித்துள்ளார்.