பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கமெரா தயாரித்து சிலர் தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். அதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே..
எனவே பெண்கள் உடை மாற்றும் அறையில் கமெரா உள்ளதா? என்பதை கண்டுபிடிக்க எளிய வழிகள் இதோ!
செல்போன்
அறைக்குள் நுழைவதற்கு முன் செல்போனிலிருந்து கால் செய்ய முடிகிறதா என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.
பின் அறைக்குள் சென்றவுடன் மீண்டும் செல்போனிலிருந்து கால் செய்யவும், பலமுறை முயற்சி செய்து பார்த்து செல்போனில் இருந்து கால் செய்ய முடியவில்லை என்றால் அந்த அறையில் ரகசிய கமெரா உள்ளது என்று அர்த்தமாகும்.
கமெரா டிடெக்டர் (Camera Detector)
ஹொட்டல் அறையில் நுழையும் போது, மிக கவனமாக கமெரா டிடெக்டர் பயன்படுத்த வேண்டும். இந்த கமெரா டிடெக்டர்கள் தற்போது ஓன்லைனில் மிக எளிமையாக வாங்கலாம்.
கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்
அறையில் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் போன்ற பொருட்களை மிக கவனமாக பார்க்க வேண்டும். ஏனெனில் ரகசிய கமெராக்களை பொதுவாக அந்த இடங்களில் தான் மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.
கடிகாரம்
பொதுவாக ஹொட்டல் அறையில் உள்ள கடிகாரங்களில் கமெரா மறைத்து வைக்கப்பட்டிருக்கும்.
மேலும் புத்தகங்கள், மேசை செடிகள், வீட்டு தாவரங்கள் போன்றவற்றிலும் கூட மறைத்து வைக்கப்பட்டிருக்கும். எனவே இதற்கு கமெரா டிடெக்டர் பயன்படுத்துவது சிறந்தது.