திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
குறித்த நிகழ்வுகள் திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகில் இன்று மதியம் நடைபெற்றுள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவாஜிலிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
இதன்போது சிவாஜிலிங்கத்தால் சுடர் ஏற்றப்பட்டு இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.