பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ‘யங் மங் சங்’. எம்.எஸ்.அர்ஜூன் இயக்குகிறார். இவர் முண்டாசுபட்டி படத்தை இயக்கியவர். அவர் கூறியது:
1980களின் காலகட்ட கதையாக இது உருவாகிறது. வில்லன் ஒருவனை பழிவாங்க பிரபுதேவாவும் நண்பர்களும் கராத்தே கற்க எண்ணுகின்றனர். இதற்காக சீனா சென்று ஷாவலின் பாணியிலான கலையை கற்க முடிவு செய்து புறப்படுகின்றனர். கராத்தேயில் தேர்ச்சி பெற்ற பிறகு திரும்பி வரும் பிரபுதேவா எப்படி பழிக்கு பழி வாங்குகிறார் என்பதுதான் கதை.
பிரபுதேவாவின் நடனம் தான் ஸ்பெஷல் என்பதால் அதற்கான இடமும் படத்தில் உள்ளது. கதாநாயகியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். பரதநாட்டிய பெண்ணாக நடிக்கும் அவருக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்று கண்டிஷன் விதிக்கப்பட்டது. அதன்படி 2 மாதம் அவர் கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடை குறைத்திருக்கிறார். வருகிற மாதங்களில் பட யூனிட் சீனா செல்லவிருக்கிறது. அங்கு நிஜ கராத்தே மாஸ்டர்களிடம் பிரபுதேவா கராத்தே பயிற்சி பெற உள்ளார். சில காட்சிகளும் சீனாவில் படமாக்கப்படுகிறது.