தற்போதைய சூழ்நிலையில் அமைச்சரவை மாற்றம் இடம்பெற வாய்ப்பில்லை என அரச உயர்மட்ட வட்டாரங்கள் ஊடாக அறிய முடிகின்றது.
இலங்கைக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் விஜயம் செய்யவுள்ளமை மற்றும் இலங்கை பிரதமரின் வெளிநாட்டு விஜயங்கள் என்பன தற்போது இடம்பெறவுள்ளன. இந்நிலையில் அமைச்சரவை மாற்றம் தற்போதைக்கு இடம்பெற வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எனவே, அவரின் விஜயம் முடிவடையும் வரை அமைச்சரவை மாற்றத்திற்கு வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
தற்போது இலங்கை அரசியலில் பரபரப்பான நிலை காணப்படுகின்றமையால் அடுத்து வரும் வாரங்களில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை மாற்றங்கள் குறித்து கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.