ரொறொன்ரோ-வயதான தங்கள் பெற்றோர்களை கவனிக்க கனடியர்கள் வருடமொன்றிற்கு 33பில்லியன் டொலர்களை தங்கள் பொக்கெட்டிலிருந்து செலவழிப்பதுடன் பணிகளிலிருந்தும் விடுப்பு எடுக்கின்றனரென புதிய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக சிஐபிசி தெரிவிக்கின்றது.
அதுமட்டுமன்றி இந்த எண்ணிக்கை அடுத்த பத்தாண்டுகளில் அதிகரிக்கும் எனவும்-தற்சமயம் 17-சதவிகிதமாக இருக்கும் 65முதல் அதற்கு மேற்பட்டவர்களின் விகிதாசாரம் 22சதவிகதமாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 2மில்லியன் கனடியர்கள் அல்லது 65வயதிற்கு மேற்பட்ட பெற்றோர்களை கொண்ட 14-சத விகிதமானவர்களின்-பெற்றோர்களிற்கான-பராமரிப்பு செலவினம் அவர்களின் பொக்கெட்டுகளிலிருந்து வருடமொன்றிற்கு 3,300டொலர்கள் செலவாகும்-வருடாந்திர செலவில் சொல்வதானால் 6பில்லியன் டொலர்களிற்கும் மேலாகும் என தெரிவிக்கின்றது.
65வயதிற்கு மேற்பட்ட பெற்றோர்களை கொண்ட 30சதவிகிதமான பணியாளர்கள் 450மணித்தியாலங்கள் வேலை நேரங்களை வருடாந்தம் தியாகம் செய்கின்றனர். இது தோராயமாக 27பில்லியன் டொலர்கள் வருமான இழப்பாக அல்லது முன்பே முடிந்து விட்ட விடுமுறை என கணிக்கப்படுகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.