சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் 3.85 கோடி பண மோசடி செய்துள்ளதாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரும், அவர் மனைவி ராதிகாவும் 3.85 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த வருண் மணியன் என்பவர் பொலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து பதிலளிக்க சரத்குமார் மற்றும் ராதிகா இன்று சென்னை எழும்பூரில் உள்ள பொலிஸ் கமிஷ்னர் அலுவலகத்துக்கு வந்தார்கள்.
பின்னர், தங்கள் மீது சுமத்தப்பட்ட புகார் குறித்து இருவரும் பொலிசாரிடம் விளக்கமளித்தார்கள். அதன் பின்னர், இருவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.