பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு குழந்தையை தாலாட்டி தூங்க வைப்பதற்கான தொட்டில் ஒன்றினை தயாரித்து ஐரோப்பிய நாடுகளில் அறிமுகப்படுத்தி உள்ளது.
பொதுவாக குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது தூங்குவதை விட வாகனத்தில் பயணம் செய்யும் போது எளிதாக தூங்கிவிடுவர்.
இதனை மையமாக வைத்து ஃபோர்டு நிறுவனம் குழந்தைகளுக்காக மேக்ஸ் மேட்டர் ட்ரீம்ஸ் என்னும் தொட்டிலை தயாரித்து வெளியிட்டுள்ளது.
வியக்க வைக்கும் பல தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தெரு விளக்குகள் போன்ற உணர்வினை உண்டாக்கும் எல்.இ.டி விளக்குகள், காரின் ஒலியை வெளியிடும் அமைப்பு போன்ற வசதிகளுடன் இந்த தொட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குழந்தை எந்த பயணத்தில் உறக்கத்தினை எட்டும் என அறிந்து கொள்வதற்கான செயலி ஒன்றினையும் இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.
பல சிறப்புகளை கொண்டுள்ள மேக்ஸ் மேட்டர் ட்ரீம்ஸ் கிரிப் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
எதிர்காலத்தில் இந்த நவீன தொட்டிலுக்கு அதிக வரவேற்பு இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.