ஒட்டாவா- நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 135மில்லியன் டொலர்களிற்கு குறைந்தால் கனடாவின் ஏற்றுமதி மார்ச் மாதம் உயர் சாதனையை எட்டியுள்ளதென கனடா புள்ளிவிபரவியல் தெரிவிக்கின்றது.
பொருளாதார வல்லுனர்கள் ஒரு 800மில்லியன் டொலர்கள் பற்றாகுறையை எதிர்பார்த்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி மார்ச்சில் 3.8சதவிகிதம் அதிகரித்து 47.0பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.ஆற்றல் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களின் அதிகரித்த ஏற்றுமதி காரணம் என கூறப்படுகின்றது.
ஆற்றல் பொருட்களின் ஏற்றுமதி 7.0சதவிகிதம் அதிகரித்து 8.7பில்லியன் டொலர்களாகியுள்ளது. நுகர்வோர் பொருட்களின் அதிகரிப்பு 6.8சதவிகதம் அதிகரித்து 6.1பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.
வெட்டப்படாத தங்கம் காரணமாக இறக்குமதி 47.1பில்லியன் டொலர்களிற்கு1.7சதவிகிதம் அதிகரித்துள்ளது.