கனடா நாட்டில் பன்றிகளுக்கு தண்ணீர் கொடுத்த குற்றத்திற்காக பெண் ஒருவர் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில் நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
கனடாவில் உள்ள ரொன்றன்ரோ நகரில் Anita Krajnc என்ற பெண் பன்றிகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு லொறி ஒன்றில் பன்றிகள் அடைக்கப்பட்டு இறைச்சி கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
சாலையில் சென்ற லொறி ஓரிடத்தில் நின்றுள்ளது. அப்போது, லொறியில் அடைக்கப்பட்ட பன்றிகள் இடைவெளியின்றி அலறியுள்ளன.
இதனைக் கண்ட அனிதா ‘பன்றிகள் தண்ணீருக்காக தான் அலறுகின்றன’ என எண்ணி பன்றிகளுக்கு தண்ணீர் கொடுத்துள்ளார்.
பெண்ணின் நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த பன்றிகளின் உரிமையாளர் தனது அனுமதி இல்லாமல் பன்றிகளுக்கு தண்ணீர் கொடுத்தது குற்றம் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
அப்போது, ‘பன்றிகளை வைத்து தொழில் நடத்தும் உரிமையாளர் அனிதா மீதுள்ள தொழில் ரீதியான விரோதம் காரணமாக தான் வழக்கு பதிவு செய்துள்ளார் என அனிதாவின் வழக்கறிஞர் வாதாடியுள்ளார்.
மேலும், அனிதா மீது வழக்கு பதிவு செய்ததற்கு அடிப்படையான ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
இதனை தொடர்ந்து, ‘பன்றிகளுக்கு தண்ணீர் கொடுத்ததன் மூலம் அனிதா எவ்வித சட்டத்தையும் மீறவில்லை.
அதே சமயம், வழக்கு தொடுத்துள்ளவரின் குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அனிதாவை வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.