பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் மற்றும் யூக்கான் ஆகிய பகுதிகளில் 6.2 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக குறித்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. எனினும், குறித்த அனர்த்தத்தினால் பாரிய சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டு நான்கு மணிநேரத்திற்கு பின்னர் 50 அதிர்வுகள் பதிவுசெய்யப்பட்டதாக புவியியல் மையம் அறிவித்துள்ளது.
இவ்வாறாக அதிர்வுகள் தொடர்ந்து வந்த நிலையில், யூக்கான் பகுதியில் அவசரகால ஒருங்கிணைப்பு மையம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
ஆறு ரிச்டர் அளவிலான நிலநடுக்கங்கள் கட்டடங்களுக்கு சேதம் விளைவிக்கலாம் என்ற போதிலும், உறுதியான கட்டட அமைப்பினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.