அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. அவரது ரசிகர்களுக்கு இன்றே திருநாள் கொண்டாட்டம் தான். ஆனால் அவர் என்னவோ இதையெல்லாம் விரும்புவதில்லை.
தனக்கென ஒரு கொள்கையோடு வாழ்ந்துவருகிறார். அவரை பற்றி பல விஷயங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இரு காதல் தோல்விகளையும் சந்தித்துள்ளார்.
ஆம். வான்மதி படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது அப்பட ஹீரோயின் ஸ்வாதியின் வீட்டுக்கே சென்று பெண் கேட்டாராம். ஆனால் ஹீரோயின் வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.
இதையும் அவர் அந்நேரத்தில் பெரியதாக பொருட்படுத்தவில்லை. பின் அதே போல தொடரும் படத்தில் நடித்த போது அப்படம் ஹீரோயின் ஹீரா மீது காதல் வந்து நிறைய லவ் லெட்டர் எழுதினாராம்.
இரு காதலும் தோல்வியானலும் அவர் துவண்டுவிடவில்லை. பின் ஷாலினியின் காதலில் ஜெயித்தார். தன் மனைவிக்கும் சுதந்திரம் கொடுத்து விளையாட்டு வீராங்கனையாக மாற்றி அழகு பார்த்துள்ளார். வாழ்க்கையிலும் வெற்றி பெற்றுள்ளார்.