பிரபல நிறுவனமான கூகுள் தனது பல்வேறு தயாரிப்புகளில் புதிய புதிய மாற்றங்களை ஏற்படுத்தி அதனை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது.
சமீபத்தில் குறைந்த இணைய வேகத்தில் வீடியோக்கள் பார்க்கும் வண்ணம் தனது யூடியூப் பயன்பாட்டில் சில மாற்றங்களை செய்து ’யூடியூப்-கோ’ என்னும் புதிய தொழில்நுட்பத்தை சந்தையில் அறிமுகப்படுத்தியது.
இது மட்டுமல்லாது குறைவான இணைய வேகத்தில் இயங்கும் வண்ணம் கூகுள் மேப்-ல் சில மாற்றங்களை செய்துள்ளது.
பயனாளர் தனது விருப்பத்திற்கு ஏற்ப திரையின் கீழ் உள்ள டூல் பாரில் ஆப்ஷன்களை சேர்த்து கொள்ள முடியும்.
மேலும், ஒவ்வொரு திரையினையும் மொபைலில் சேமித்து வைத்து கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளதால் இணைய வசதி இல்லாத போதும் சேமித்து வைக்கப்பட்டுள்ள மேப்பினை பயனாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.