இந்தியாவே.. ஏன் உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரபாஸ். 5 வருடமாக வேறு படங்கள் எதுவும் ஏற்காமல் இதே படத்தில் தொடர்ந்து நடித்தார்.
படத்தின் முதல் பகுதி 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியுள்ள நிலையில், இரண்டாவது பாகம் முதல் நாளிலேயே 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துவருகிறது.
இந்த படத்திற்கு பிரபாஸ் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது தான் ரசிகர்கள் பலருக்கும் உள்ள கேள்வி. முதல் பாகத்திற்கு மட்டும் பிரபாஸ் வாங்கிய சம்பளம் 20 கோடி ரூபாய், மற்றும் இரண்டாம் பாகத்திற்கு அதை விட மூன்று மடங்கு அதிகம் சம்பளம் வாங்கியிருக்கிறார் என டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.