இந்தியாவில் கமாண்டோக்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி, தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் படையினர் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தியபோது, மீட்புப் பணிக்குச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இதில், சிறப்பு கோப்ரா கமாண்டோ படையினர் ஐந்து பேர் பயணித்தனர்.
ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வீரர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். உயிரிழப்பு ஏதும் இல்லை.
இந்த நிலையில், இந்த விபத்தின் நேரடிக் காட்சி, வீடியோவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.