ஆப்பிள் நிறுவனத்தின் கைப்பேசிகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் மட்டுமன்றி அவற்றின் வடிவமும் கைப்பேசி பிரியர்களை வெகுவாக கவரும்.
ஆண்டு தோறும் புதிய கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிறுவனம் அவற்றின் வடிவத்திலும் மாற்றங்களை மேற்கொள்ளும்.
இதன் அடிப்படையில் இவ்வருடம் iPhone 8 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் குறித்த கைப்பேசிகள் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
தற்போது iPhone 8 கைப்பேசியின் வடிவம் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை அறிமுகம் செய்ய ஆரம்பித்து 10 வருடங்களை எட்டியுள்ள நிலையில் அதனைக் கொண்டாடும் முகமாக இவ்வாறான வடிவில் கைப்பேசியினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் இது ஆப்பிள் நிறுவனத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.