இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்த்துத் தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காராவிடம் பிறந்தநாள் பரிசாக ஒன்றை கேட்டுள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி சச்சின் டெண்டுல்கர் தனது 44 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடினார்.
பலரும் டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் குமார் சங்கக்காராவும் டுவிட்டர் மூலம் சச்சினுக்கு பிறந்ததின வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சங்கக்காராவின் பிறந்த தின வாழ்த்திற்கு நன்றி தெரிவித்து சச்சின், சங்கக்காராவிடம் என்னை எப்போது Ministry of Crabs ற்கு அழைப்பீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள சங்கக்காரா நீங்கள் எப்போதும் வரலாம். நீங்கள் வரும் போது மரியாதையுடன் உபசரிக்கத் தயாராகவுள்ளேன் என பதிலளித்துள்ளார்.
மேலும், ஐபிஎல் தொடரில் சச்சின் மற்றும் மஹேல ஜெயவர்த்தன பயிற்சியால் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.