பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவிற்கு ஏ.சி வசதி செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவி உள்ளது.
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் மேல் மட்டத்தில் உள்ளவர்களிடம் பேசி, தேர்தல் நிதியாக, 36 கோடி ரூபாயை, சசிகலா தரப்பினர் கொடுத்துள்ளதாகவும், அதனால், அவருக்கு சிறையில் ஏ.சி வசதி செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் பரவி உள்ளது.
இது குறித்து, வெளியான தகவல் படி, காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியாவை, சசிகலா தரப்பில் இருந்து சிலர் அணுகியுள்ளனர். அதன்பின், சோனியாவிடம் இருந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு உத்தரவு போயுள்ளது.
சசிகலா தரப்பிலிருந்து சிலர், சித்தராமையாவையும் சந்தித்துப் பேசி 36 கோடி ரூபாய், காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் நிதியாக அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, முதல் வகுப்பு கைதிக்கு அளிக்கப்படும் வசதிகளைக் கடந்து கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சிறையில், அவருக்கு ஏ.சி வசதி கூட செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைத் தகவல்கள் கூறுகின்றன.