‘சட்டம் என் கையில்’, ‘கல்யாணராமன், உரிமை’, ‘காவியத் தலைவன்’, ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’ உள்ளிட்ட 130-க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக இவர் பணிபுரிந்துள்ளார். ராம.நாராயணன் இயக்கத்தில் வெளியான படங்களில் 80-க்கும் மேற்பட்ட படங்களுக்கு விஸ்வநாதன் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார். ‘பெரிய வீட்டு பண்ணைக்காரன்’ படத்தின் மூலம் இயக்குநரானார். அதைத் தொடர்ந்து ‘இணைந்த கைகள்’, ‘நாடோடி பாட்டுக்காரன்’, ‘பெரிய மருது’, ‘ஜெகன்மோகினி’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் நாமனூர். ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார். இவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை மாலை நடைபெறுகிறது.