தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் கடின உழைப்பால் இடம் பிடித்தவர் நடிகை சமந்தா. தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்ததை தொடர்ந்து தெலுங்கிலும் கலக்கி வந்தார்.
தற்போது தமிழில் மட்டும் சாவித்திரி வாழ்க்கை வரலாறு, இரும்புத்திரை படம், சிவகார்த்திகேயன் படம் என அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இதனால் சமந்தா கால்ஷீட் பெற தற்போது பெரும்பாடாக இருக்கிறதாம்.
ஒரே நேரத்தில் எல்லோரும் கால்ஷீட் கேட்பதால் கால்ஷீட் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறாராம். படத்தின் வேலைகள் அதிகமாவதால் தற்போது நாக சைத்தன்யாவுடன் நடக்க இருந்த தனது திருமண தேதியையும் தள்ளி வைத்துள்ளார்.