முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மே தினக் கூட்டத்திற்கு அழைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்றிரவு இடம்பெற்றது. இதன் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இந்த வாரம் அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என மஹிந்தவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கண்டியில் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.