விஜய் 61வது படத்தில் நித்யா மேனன் நடிக்க இருந்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது ஜோதிகா. ஆனால் ஜோதிகா அப்படத்தில் இருந்து படப்பிடிப்புக்கு முந்தைய நாள் வெளியேறியிருந்தார்.
உடனே சூர்யா, சிவகுமார் தான் விஜய் படத்தில் ஜோதிகா நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்ற தகவல் வந்தது. அதேபோல் பாலா படமான நாச்சியார் படத்தில் ஜோதிகா கமிட்டானதால் தான் ஜோதிகா விஜய் படத்தில் நடிக்கவில்லை என்றும் செய்திகள் வந்தன.
இந்நிலையில் ஒரு பேட்டியில் ஜோதிகா இதுகுறித்து பேசும்போது, நான் ஏன் விஜய் படத்தில் இருந்து வெளியேறினேன் என்று கூறாமல் இருப்பது நல்லது. சூர்யா மற்றும் அப்பா (சிவகுமார்) இருவரும் விஜய் பட வாய்ப்பு வந்த போது உன்னுடைய விருப்பம் போல் செய் என்று தான் கூறினார்கள்.
விஜய் படத்தில் நடிப்பதாக இருந்த போதே பாலா அவர்களின் படத்தில் கமிட்டாகிவிட்டேன். அதோடு படப்பிடிப்பையும் ஜுன் அல்லது ஜுலையில் நடத்திக் கொள்ளலாம் என்று எப்போதோ நாங்கள் முடிவு செய்துவிட்டோம் என்றார்.