பாலிவுட்டில் பிரபல நடிகர்கள் சேர்ந்து நடிப்பது சாதரணம் தான். ஆனால், இந்த கலாச்சாரம் தென்னிந்தியாவில் தற்போது தான் எட்டிப்பார்க்கின்றது.
அதிலும் தன்னை போல் மார்க்கெட் உள்ள நடிகர்களுடன் யாரும் சேர்ந்து நடிப்பது இல்லை, தன்னை விட மார்க்கெட் குறைந்த நடிகர்களுடனே இணைந்து நடிக்க சம்மதிக்கின்றனர்.
ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியன் செல்வன் படம் உருவாக இருந்தது, இதில் விஜய், மகேஷ் பாபு இணைந்து நடிப்பதாக இருந்தது.
இதற்காக மணிரத்னம் இருவரிடமும் பேசி 15 நாளில் போட்டோஷுட் எடுக்க இருந்தார்களாம்.
பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை அந்த படம் ட்ராப் ஆக, இருவருமே மிகவும் வருத்தமடைந்தார்களாம்.