எட்மன்டன் வடக்கில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் பின்னால் 20-மாதங்கள் மதிப்பிடக்கூடிய சிறு குழந்தையின் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை கண்டு பிடிக்கப்பட்ட சிறுவனின் உடல் கடந்த செவ்வாய்கிழமையில் இருந்து அங்கு அனாதரவாக போடப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தை யாருடையதென அடையாளம் கண்டு பிடிக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். குட் செப்பேட் அங்லிக்கன் தேவாலயத்தின் அருகில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30மணியளவில் அவ்வழியாக சென்ற ஒருவர் இவனின் உடலை கண்டுபிடித்துள்ளார்.
சனிக்கிழமை தெரிவிக்கப்பட்ட புலன்விசாரனை அறிக்கை ஒன்றில் செவ்வாய்கிழமை காலை 10.51லிருந்து 11.51ற்கும் இடைப்பட்ட நேரத்தில் அவ்விடத்தில் விடப்பட்டிருக்கலாம் என புலன்விசாரனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அருகாமையில் உள்ள சோபிஸ் கடையில் பதியப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவில் திங்கள்கிழமை ஏப்ரல் 17 அன்று மனிதன் ஓருவர் மற்றும் பெண் ஒருவரும் தனித்துவமான பந்து தொப்பிகள் அணிந்தவண்ணம் ஸ்ரோலர் ஒன்றை தள்ளிச்செல்வது பதிவாகியுள்ளது.
சனிக்கிழமை மாலை ஆண் மற்றும் பெண் இருவரும் சம்பவம் ஏதும் இன்றி கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிசார் சிறுவன் அணிந்திருந்த ஆடைகளை பொதுமக்களின் பார்வைக்கு விட்டுள்ளனர்.
தேவாலய வாசலில் மஞ்சள் ரியுலிப் பூக்கள் சிறுவனிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வைக்கப்பட்டது.
திங்கள்கிழமை காலை 9.30மணிக்கு பிரேத பரிசோதனை நடை பெற உள்ளது.
குழந்தையின் துரதிஷ்டவசமான மரணத்திற்கான சூழ்நிலைகளை கண்டறிய பொலிசார் முயன்று வருகின்றனர்.
சிறுவனின் உடலை அடையாளம் காண உதவுமாறு பொலிசார் மக்களின் உதவியை நாடுகின்றனர்.